சென்னை அடுத்த மாதவரத்தில் ஓடும் மின் ஸ்கூட்டரில் திடீரென தீப்பிடித்த நிலையில், வாகன ஓட்டி தக்க நேரத்தில் இறங்கியதால் உயிர் தப்பினார்.
அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், இன்று காலை மாதவரம் வழியாக தனது இபுளூடோ7ஜி (EPluto7G) நிறுவனத்தின் மின் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வாகனத்தில் இருந்து திடீரென புகை வந்த நிலையில், அவர் சாலையோரத்தில் அதனை நிறுத்திவிட்டு சிறிது தூரம் தள்ளி நின்றார்.
இதனையடுத்து, அந்த வாகனத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவ்வழியாக சென்ற குடிநீர் லாரியை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.