போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவிவகித்து வந்த ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.