கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டதையொட்டி, கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு மாநகராட்சி மேயர் கறி விருந்து வைத்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் மாநகராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிக்கன் மட்டன் என கறி விருந்து வைத்தார்.