திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பத்திரகாளியம்மன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வேலைக்குச் சென்றிருந்த அவரது தாய் திரும்பி வந்து பார்த்தபோது பின் பக்க வாசல் அருகே கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் மாணவியின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.