தேனியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கும் பிறகு அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கும் என சுமார் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தை 19 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்திக் கடந்து சாதித்துள்ளார்.
14 வயதான சினேகன் என்ற அந்த மாணவர், கடந்த 2019ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கத்தையும் கர்நாடகாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
நீண்ட தூர கடல் நீச்சலில் ஆர்வம் கொண்ட சினேகன், மத்திய அரசின் அனுமதியையும் இலங்கை அரசின் அனுமதியையும் முறையாகப் பெற்று, இரு நாட்டு கடற்படைகளின் உதவியோடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.