​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Published : Mar 29, 2022 3:18 PM

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Mar 29, 2022 3:18 PM

உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வரும் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதி அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 1ஆம் தேதி வடதமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மனி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.