இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வழங்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க வனத்துறையினர் தடை விதித்ததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
எனவே பாம்பு பிடிக்க அனுமதிக்குமாறு இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய பாம்பினங்கள் பயன்படுத்தப்படுவதால், அடுத்த 9 மாதங்களில் 5,000 பாம்புகளை பிடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பிடிபடும் பாம்புகளுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.