விபத்துக்குள்ளான சீன பயணிகள் விமானத்தின் 2ஆவது கருப்புப்பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று 132 பேருடன் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன்சின் போயிங் 737 ரக விமானம் குவாங்சி மலைப்பகுதியில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில், முதல் கருப்புப் பெட்டி கடந்த 23ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விமானத்தின் 2வது கருப்புப்பெட்டியும் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசின் சைனா டெய்லி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தரவுகளை பதிவுசெய்யும் கருவியாக 2வது கருப்புப் பெட்டி நம்பப்படுவதால், விமானத்தின் வேகம், அது பயணித்த உயரம், திசை போன்றவை அதில் பதிவாகி இருக்கும் என கூறப்படுகிறது.