​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்து பயணிகளுக்கு சாலையோர உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே தயாரித்து பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி தமிழக அரசு உத்தரவு.!

Published : Mar 25, 2022 4:57 PM

அரசு பேருந்து பயணிகளுக்கு சாலையோர உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே தயாரித்து பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி தமிழக அரசு உத்தரவு.!

Mar 25, 2022 4:57 PM

அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கு சாலையோர உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே தயாரித்து பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு விரைவு பேருந்துகள் நிற்க கூடிய உணவகங்கள் தொடர்பான டெண்டர் மற்றும் அதற்கான நிபந்தனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், சாலையோர உணவகங்கள் தொலைதூரம் செல்லும் பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காத வகையில் தரமான உணவு, குடிநீர் வழங்க வேண்டும், சுகாதாரமான இலவச கழிவறை வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் இடம்பெற்றிருந்தன.

அதோடு, சாலையோர உணவகங்களுக்கு ஏற்கனவே கோரப்பட்ட டெண்டர் நிபந்தனையில் சைவ உணவு மட்டுமே சமைத்து பரிமாற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது, சைவ உணவு விடுதிகள் என்ற வார்த்தையை போக்குவரத்து துறை நீக்கியுள்ளது.