சென்னையில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், குடியிருப்பு கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வருவதாகவும், விதிமீறல் கட்டடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இராயபுரம் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விதிகளை மீறி கட்டப்பட்ட 125 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாகவும் 11 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின் படி கட்டடங்களை கட்ட வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.