வரும் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.
மத்திய அரசிற்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் அந்த இரு நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், அந்நாட்களில் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
முன்னதாக, வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் கிடையாது என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது மக்களுக்குப் பாதகம் ஏற்படுத்தும் செயல் என குறிப்பிட்ட போக்குவரத்துக் கழகம், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளத்தைப் பிடிப்பதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறியுள்ளது.