​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவுக்கு இந்திய வம்சாவளி தலைமை பொறுப்பு

Published : Feb 23, 2022 7:01 PM

ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவுக்கு இந்திய வம்சாவளி தலைமை பொறுப்பு

Feb 23, 2022 7:01 PM

ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு, அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு அளிக்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் எனவும், வி.இ.பி. மற்றும் ரஷ்யாவின் ராணுவ வங்கி என இரண்டு பெரிய வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச பொருளாதாரத்திற்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனருமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான தலீப் சிங், ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்த தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.