​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவரும் இணைந்து நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் - முதலமைச்சர்

Published : Feb 23, 2022 5:32 PM

அனைவரும் இணைந்து நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் - முதலமைச்சர்

Feb 23, 2022 5:32 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் இணைந்து நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிறைவேற்றும் திட்டங்கள் முழுமையாக மக்களை வந்தடைகிறதா என்பதை நேரடியாக வந்து பார்வையிடுவேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவிதப் புகாரும் வராத வகையில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பணியாற்றுவதையும் கண்காணிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

கூட்டணியினரின் ஒற்றுமை தேர்தல் உறவாக மட்டும் இல்லாமல், கொள்கை உறவாகவ தொடர்வதால்தான் இந்த வெற்றி சாத்தியமானதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆட்சியை திறம்படக் கொண்டு செலுத்த ஊக்கமளித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.