முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அன்மையில் வெளியிட்ட சமூக வலைத்தள செயலியில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததால் ட்விட்டரில் அதனை கிண்டல் அடித்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அந்நாட்டு அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது டிரம்ப் வன்முறை தூண்டும் விதமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டதால், அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். பின்னர் அந்த பதிவுகள் நீக்கப்பட்டதோடு அவரது சமூகவலைத்தள பக்கமும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, சென்சார் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட Truth Social என்ற புதிய செயலியை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். ஐ-போனில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை படைத்த "ட்ரூத் சோசியல்"லில் புதிய கணக்கு தொடங்குவதில் இருந்து ஏராளமான குறைபாடுகள் இருந்ததால் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவற்றை கிண்டலடித்து மீம்ஸ்கள் பகிர்ந்து வருகின்றனர்.