​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர வாய்ப்பு

Published : Feb 23, 2022 3:33 PM



உக்ரைன் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர வாய்ப்பு

Feb 23, 2022 3:33 PM

உக்ரைன் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 டாலரை நெருங்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்பு 2014-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலராக அதிகரித்த நிலையில், அதன் பிறகு தற்போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும், நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், 5 மாநில தேர்தலுக்கு பின் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து இயற்கை திரவ எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யும் நிலையில், போர்சூழலால் இந்த விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் உள்ளதால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது