ரஷ்யா நினைத்தால் உக்ரைனுக்கு எதிரான போரை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், ரஷ்ய நாட்டின் நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உக்ரைனில் பிரிவினைவாதம் கோரிய 2 பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அறிவித்தது. மேலும் அங்கு ரஷ்ய ராணுவத்தை அனுப்பவும் அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளன.
உக்ரைன் படையெடுப்பை தவிர்க்குமாறு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ரஷ்ய மக்களின் நலன்கள் மற்றும் தேவைகளில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை என புதின் தெரிவித்துள்ளார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.