உலகம் முழுவதும் குறைந்த விலையில் தடுப்பூசிகளை விநியோகம் செய்ததாக, இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான சுகாதார கூட்டாண்மை தொடர்பாக காணொலியில் நடைபெற்ற கூட்டத்தில் பில்கேட்ஸ் பங்கேற்றார். அதில் பேசிய அவர், கடந்த ஆண்டில் சுமார் 100 நாடுகளுக்கு மொத்தம் 15 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா, ரோடா வைரஸ் போன்றவற்றிற்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கூறிய பில்கேட்ஸ், இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.