ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் நீடித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கோதுமை, உலோகங்களின் விலை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
போர் பதற்றத்தால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.7டாலராக உயர்ந்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் விலையேற்றம் 2014 செப்டம்பருக்கு பிறகு அதிகம் எனக் கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள், உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்தால், இயற்கை எரியாவு விலை 10 மடங்கு அதிகரிக்கும் எனவும், பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் எனவும் கணித்துள்ளனர்.
கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காவது இடத்தில் உள்ளதால், கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்கள் வருவதில் தடங்கல் ஏற்பட்டால், கோதுமையின் விலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் அச்சம் காரணமாக, வாகன எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பல்லேடியம் என்ற உலோகத்தின் விலை சமீபத்திய வாரங்களில் உயர்ந்துள்ளது.