​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Published : Feb 23, 2022 2:08 PM

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Feb 23, 2022 2:08 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

24, 25, 26-ந் தேதிகளிலும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-ந் தேதி தென் தமிழகம் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூரில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.