தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கியூ பிரிவு போலீசாரால் கைபற்றப்பட்டு கடத்தல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கீழ வைப்பார் கடற்கரை பகுதியில் கைபற்றப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் கோவாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இலங்கைக்கு ஒரு கிலோ போதைபொருளை கடத்த 60 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு கொண்டு சென்று சர்வதேச கடத்தல் கும்பலிடம் போதைபொருளை ஒப்படைக்க திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.