நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலன்று திமுக நிர்வாகியை அரை நிர்வாணமாக்கி தாக்கிய புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மீது கூடுதலாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் ஒரு வழக்கில் அவரை கைது செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுதல் மற்றும் தொற்றுநோய் பரவ காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாரை, மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் கொலை முயற்சி பிரிவையும் அதில் சேர்த்துள்ளனர்.