திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதால் மர்ம நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழுதாவூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக உள்ள திமுக பிரமுகர் அருள்முருகன் என்பரின் வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர், அருள்முருகனின் 70 வயது தாயார் சரஸ்வதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மூதாட்டி கூச்சலிடவே அவரை தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பியோட முயன்றுள்ளார்.
அதற்குள் அருகில் இருந்தவர்கள் வந்து அந்த நபரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மர்ம நபர் தாக்கியதில் படுகாயமடைந்த மூதாட்டி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.