ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துவிட்டதால் இனி அந்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளை முழு அளவில் ரஷ்யா நிராகரித்துவிட்டதாக சாடிய அவர் இந்த வாரத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடனான சந்திப்பை ரத்து செய்துள்ளார்.
இதனிடையே வெள்ளை மாளிகையில் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, பேச்சுவார்த்தைக்கான கதவை அமெரிக்கா அடைத்துவிடவில்லை, இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்று அறிவித்தார்.
போர் நடவடிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் முழு அளவிலான போரைத் தவிர்க்குமாறு ரஷ்யா ராணுவத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.