உத்தரபிரதேச சட்டப் பேரவையில் 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லக்னோ, லக்கிம்பூர், ரேபரேலி, உள்ளிட்ட தொகுதிகளில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
லக்னோவில் தன் வாக்கை பதிவு செய்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இஸ்லாமியர்கள், தலித் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என்றார்.