கர்நாடகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் ஹிஜாப் விவகாரத்தால் கல்லூரிகளின் விடுமுறை 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு உடுப்பி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் அமைதி காக்கும்படி உயர்நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்.