பிப்ரவரி 14 திங்கட்கிழமை முதல் அனைத்து விரைவு ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவு வழங்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க ரயில்களில் உணவு சமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா அலை பின்வாங்கத் தொடங்கியுள்ளதையடுத்து மீண்டும் ரயில்களில் உணவு கேண்டீன்கள் இயங்க உள்ளன. தற்போது 428 ரயில்களில் உணவு வழங்கப்படுகிறது.
திங்கள்கிழமை முதல் அனைத்து ரயில்களிலும் சமைத்த உணவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..