நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்றதை அடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அமர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி பிப்ரவரி முதல்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்து.
குடியரசுத் தலைவரின் உரை மற்றும் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பதிலுரையாற்றியதைத் தொடர்ந்து முதல் அமர்வு நிறைவு பெற்றுள்ளது. இரு அவைகளும் மீண்டும் மார்ச் 14 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த இரண்டாம் அமர்வில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் குறிது விவாதிக்கப்பட உள்ளது