​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிப்டோகரன்சி வருமானத்துக்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published : Feb 11, 2022 7:20 PM

கிரிப்டோகரன்சி வருமானத்துக்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 11, 2022 7:20 PM

கிரிப்டோகரன்சிகள் மீதான வருமானத்துக்கு வரி விதிப்பதால் அதற்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளித்ததாகக் கருத முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், கிரிப்டோகரன்சி மீதான வருமானத்தின் மீது வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.

இப்போதுள்ள நிலையில் கிரிப்டோகரன்சியைச் சட்டப்படியானதாக அறிவிக்கவோ, தடைசெய்யவோ போவதில்லை என்றும், உரிய ஆலோசனைக்குப் பின் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிரிப்டோகரன்சி மீதான வருமானத்துக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.