நீலகிரி மாவட்டம் உதகையில் பட்டப்பகலில் பலரது கண்முன்னே நண்பனை கத்தியால் குத்திக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
மஞ்சனக்கொரை கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவரும் கார்த்திக் என்பவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் இருவருக்கும் விளையாட்டாகத் தொடங்கிய வாக்குவாதம் தகராறில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது கார்த்திக் தன் பையில் மறைத்துவைத்திருந்த கத்தியால் ஹரியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஹரி பேருந்து நிலைய வளாகத்திலேயே உயிரிழந்தார்.
கார்த்திக் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே வனத்திலிருந்து கருங்குரங்கு ஒன்றை பிடித்து வந்து கொலை செய்து, வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.