திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவரின் 3 வயது மகன் சஞ்சீஸ்வரன், காலை சமையலுக்காக வைத்திருந்த தேங்காய்த் துண்டுகளை எடுத்து சாப்பிட்டுள்ளான்.
அதில் ஒரு துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை துடித்துள்ளான். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சஞ்சீஸ்வரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.