சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பெண், வேலையை ராஜினாமா செய்து விட்டு திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
நிரஞ்சனா ஜெகதீஷ் என்ற அந்த மென்பொருள் பொறியாளர், 5 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது கணவர் திமுக இளைஞரணியில் உறுப்பினராக இருக்கும் நிலையில், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், அது மகளிருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு என்பதால், தாம் செய்து கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட 51ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு நிரஞ்சனா போட்டியிடுகிறார்.