​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் - நிதி ஆயோக்

Published : Feb 11, 2022 5:21 PM

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் - நிதி ஆயோக்

Feb 11, 2022 5:21 PM

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சாதனைக்கு மாவட்ட அளவில் சிறந்த வளர்ச்சி நிர்வாகத்தைக் கொண்டு இருப்பது காரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலவச அரிசி திட்டம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதும் வறுமை ஒழிப்பிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.