​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெஸ்லா நிறுவனத்தில் இன பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Published : Feb 11, 2022 5:17 PM

டெஸ்லா நிறுவனத்தில் இன பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Feb 11, 2022 5:17 PM

மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் டெஸ்லா தொழிற்சாலையில், கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இன பாகுபாடு காட்டப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் Fair Employment and Housing என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா கார் தொழிற்சாலையில் பணிபுரியும் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இன ரீதியில் பிரிவினை காட்டப்படுவதாகவும், புகார்களின் அடிப்படையில் அதற்கான ஆதாரத்தை மூன்று வருடங்களாக விசாரணை நடத்தி கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கறுப்பினத்தவர் அல்லாத தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்கீடு, ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் உள்ள கறுப்பினத் தொழிலாளர்கள் அதிக வேலைப்பளு கொண்ட வேலையில் மட்டும் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான மற்றும் நியாயமற்ற வழக்கு என்று டெஸ்லா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.