​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்கத் தமிழ்நாடு எதிர்ப்பு.. உரிய நீரை வழங்கக் கோரிக்கை

Published : Feb 11, 2022 5:12 PM

மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்கத் தமிழ்நாடு எதிர்ப்பு.. உரிய நீரை வழங்கக் கோரிக்கை

Feb 11, 2022 5:12 PM

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்கத் தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நீரை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில் காணொலியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகப் பொதுப்பணித்துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரித் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு உறுப்பினர் பட்டாபிராமன், கேரள, கர்நாடக நீர்வளத்துறைச் செயலர்கள், புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி மாதந்தோறும் நீரைப் பிலிக்குண்டுலுவில் வழங்கத் தமிழகம் வலியுறுத்தியது. தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.