ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தேசிய அளவில் பெரிதாகக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, மத உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாக முறையிடப்பட்டது.
அப்பொழுது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இன்னும் வெளியாகவில்லை என்றும், அரசியலமைப்பு சட்டப்படி ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தீர்வுக்காணப்படும் என வாதிட்டார்.
இதனை தொடர்ந்து, ஹிஜாப் தொடர்பான விசாரணையையும், உத்தரவையும் கவனித்து வருவதாக தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, உரிய நேரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.
மேலும், இப்பிரச்சனையை தலைநகர் வரை கொண்டு வந்து தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர்அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைவருக்கும் பொதுவானது என்றும் கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை உடனடியாக மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.