அமெரிக்கா அதிபராக பதவிவகித்த போது அலுவல் சார்ந்த கோப்புகளை கிழித்தெறிந்து வெள்ளை மாளிகையின் கழிவறையில் டொனால்ட் டிரம்ப் கொட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
புளோரிடாவில் உள்ள டிரம்பின் பண்ணை வீட்டில் இருந்து 15 பெட்டிகளில் அரசு சார்ந்த ஆவணங்களை திங்கட்கிழமையன்று அந்நாட்டின் தேசிய ஆவண காப்பக அலுவலகம் மீட்டது.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப், இந்த ஆவணங்களை தன்னுடனே எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகை ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டது கண்டறியப்பட்டதாகவும், அது குறித்து விசாரிக்க நீதித்துறையிடம் ஆவண காப்பகம் தரப்பில் கோரிக்கை வைக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.