​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Published : Feb 11, 2022 2:40 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Feb 11, 2022 2:40 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர பல்வேறு யுத்திகளை கையாண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை மாநகராட்சியின் 104வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ஆதரவாளர்கள் புடை சூழ, ஆட்டம் பாட்டத்துடன் சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சியின் 135 வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர், துணிகளுக்கு இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சியின் 131-வது வார்டில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வேடமணிந்த ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சியின் 169 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், சைதாப்பேட்டையில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலத்தின் 54 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ் ,தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என நான்கு மொழிகளில் பேசி வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுத்தும் குப்பைகளை அகற்றியும் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் இளம் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்ததோடு, முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 136வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம் மேற்கொண்டார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்தவெளி வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பட்டணம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி ராஜேஷ் குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை துடியலூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.