​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. போலீசாரின் கால்களில் விழுந்து மன்றாடிய விவசாயி..

Published : Feb 11, 2022 2:26 PM



பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. போலீசாரின் கால்களில் விழுந்து மன்றாடிய விவசாயி..

Feb 11, 2022 2:26 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் போலீசாரின் கால்களில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார்.

பண்ணாரி சோதனை சாவடி வழியாக நேற்று மாலை 6 மணியளவில் பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இரவு நேர போக்குவரத்துத் தடை நேரம் தொடங்கியதாகக் கூறி அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், இரவு முழுவதும் கால்நடைகள் லாரியில் காத்திருந்தால் அவைகளுக்கு தீவனம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் எனக் கூறி, அந்த லாரியை மட்டும் அனுமதிக்குமாறு போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு கட்டத்தில் காலில் விழப்போன விவசாயியைத் தடுத்து நிறுத்தி, கால்நடை ஏற்றி வந்த லாரியை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.