திருப்பூர் அருகே சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவனை செல்போன் சிக்னலை வைத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நேகா என்ற அந்தப் பெண், வெள்ளியங்காடு பகுதியில் அபிஜித் என்பவனுடன் ஒரு மாத காலம் தங்கி இருந்ததும் சம்பவத்தன்று திடீரென்று வீட்டை காலி செய்வதாகக் கூறி, அபிஜித் மட்டும் பொருட்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர் தனது கூட்டாளி கேய்லால் சாவ்ரா என்பவனுடன் சேர்ந்து சடலம் அடைக்கப்பட்ட சூட்கேசை அவன் கால்வாயில் வீசிச் சென்றதையும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கண்டறிந்தனர்.
வீட்டு உரிமையாளரிடம் இருவரது செல்போன் எண்களைப் பெற்ற போலீசார், நெட்வொர்க் சிக்னலை டிராக் செய்து, ஓசூர் அடுத்த பாத்தகோட்டா கிராமத்தில் வைத்து கேய்லால் சாவ்ராவை கைது செய்தனர். அபிஜித் குறித்து அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.