இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 58 ஆயிரத்து 77 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 657 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 3 புள்ளி 89 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது நாடு முழுவதும் 6 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.