நீட் தேர்வு விவகாரம் குறித்து, பொதுவெளியில் முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நீட் தேர்வு விவகாரத்தில் சரித்திரம் தெரியாமல் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார்.
2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது எனவும், உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்த போதும் காங்கிரஸ் தான் மீண்டும் நீட் தேர்வை கொண்டு வந்தது எனவும் அவர் தெரிவித்தார்.