வாகன விபத்துகளில் இழப்பீடு தொகையை மாநில அரசுகள் வழங்கும் 40 ஆண்டு நடைமுறையை மறுபரிசீலனை செய்யும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக வாகன விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க மிகக்குறைந்தளவே நிதிஒதுக்கப்படுவதால் அது விபத்துக்குள்ளானவர்களுக்கு போதிய அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வழக்கின் விசாரணை ஜூலை மாதம் வரை ஒத்தி வைத்த நீதிமன்றம் அதற்குள் காப்பீடு நிறுவனங்கள் மூலம் வாகனங்களைக் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.