​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார்

Published : Feb 11, 2022 8:29 AM

ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார்

Feb 11, 2022 8:29 AM

எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த என்ற பெருமைக்குரிய பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி லுக் மாண்டாக்னியர் தனது 89வது வயதில் காலமானார்.

பாஸ்டர் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது 1983ம் ஆண்டு எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்தார். எச்ஐவி வைரஸ் குறித்த கண்டுபிடிப்புகளை யார் முதலில் கண்டுபிடித்தது என்பது குறித்து காலே என்ற விஞ்ஞானியுடன் அவர் நீண்ட போராட்டம் நடத்தினார். இறுதியில் இருவரும் அந்தச் சாதனையைப் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை சக ஆய்வாளருடன் மான்டாக்னியர் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.