விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தில், இளம்பெண் ஒருவர் விட்டு சென்ற கைக்குழந்தையை மீட்ட போலீசார், தனியார் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பிறந்து 11 நாட்களேயான கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர், இருக்கை இல்லாததால் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் குழந்தையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பெண் பேருந்தில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். கைக்குழந்தையுடன் இறங்கிய பயணி அந்த குழந்தையை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தையை மீட்ட போலீசார், அரியாங்குப்பத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்