​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரச்சாரம்

Published : Feb 11, 2022 7:31 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரச்சாரம்

Feb 11, 2022 7:31 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவரும் வகையில் வித விதமான முறைகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டர். முன்னதாக வாக்காளர்களை கவரும் வகையில் நடன கலைஞர்கள் நடனமாடினர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அபூபக்கர் சித்திக் உடலில் வண்ண விளக்குகளையும், பந்துகளையும் கட்டிக் கொண்டு ஊர்வலமாக சென்று நூதன வீதிப் பிரசாரதில் ஈடுபட்டார்.

 

காஞ்சிரபுரம் மாநகராட்சி 35-வது வார்டில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளர் சுபாஷினி ரவி தோப்புக்கரணம் போட்டும், சிறு வணிகர்களுடன் இணைந்து வியாபாரம் செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.