​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம், குளிர் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

Published : Feb 11, 2022 7:19 AM

அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம், குளிர் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

Feb 11, 2022 7:19 AM

அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டமும் குளிரும் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிட்ட தட்ட அனைத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையில் சரிவு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி உத்தரப்பிரதேசம் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையிலும் நள்ளிரவிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
2 நாட்களுக்கு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், மேகாலாயா போன்ற சில மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.