​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜன் தன் கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.15 லட்சம்-மத்திய அரசு செலுத்திய பணம் என நினைத்து செலவு செய்த விவசாயி

Published : Feb 10, 2022 6:33 PM



ஜன் தன் கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.15 லட்சம்-மத்திய அரசு செலுத்திய பணம் என நினைத்து செலவு செய்த விவசாயி

Feb 10, 2022 6:33 PM

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர், தனது ஜன் தன் வங்கி கணக்கில் திடீரென வந்த 15 லட்சம் ரூபாய், மத்திய அரசு செலுத்துயுள்ளதாக நினைத்து,ஒரு பகுதியை செலவு செய்த நிலையில், அது தவறுதலாக கணக்கில் செலுத்தப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுரங்கபாத்தை சேர்ந்த கியானேஷ்வர் ஓட்டே என்ற விவசாயின் பேங்க் ஆஃப் பரோடா கணக்கில் சென்ற ஆண்டு ஆகஸ்டில் 15 லட்சம் ரூபாய் ஏறியது.

இந்த பணம் பிரதமர் மோடி சொன்ன பணமாக இருக்கலாம் என நினைத்த அவர், அதில் 9 லட்சத்தை எடுத்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பணம் பிம்பல்வாடி (Pimpalwadi) கிராம பஞ்சாயத்துக்கு செலுத்தப்பட்ட தொகை எனவும், தவறுதலாக அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அவரது வங்கி தெரிவித்தது.

தற்போது 6 லட்சத்தை திருப்பி செலுத்தியுள்ள விவசாயி,மீதமுள்ள 9 லட்சத்தை செலுத்த அவகாசம் கேட்டுள்ளார்.