ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை-மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Published : Feb 10, 2022 6:11 PM
ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை-மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Feb 10, 2022 6:11 PM
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஆட்சியர் செந்தில் ராஜ் சான்றிதழ் வழங்கினார். சென்னை, மதுரை மற்றும் நெல்லை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.