​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக காவல்துறையில் 90 சதவிகித அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும்,திறமையற்றவர்களாகவும் உள்ளனர் - சென்னை உயர்நீதிமன்றம்

Published : Feb 10, 2022 6:03 PM



தமிழக காவல்துறையில் 90 சதவிகித அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும்,திறமையற்றவர்களாகவும் உள்ளனர் - சென்னை உயர்நீதிமன்றம்

Feb 10, 2022 6:03 PM

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளது.

நில விற்பனை தொடர்பான புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறுவிசாரணை நடத்தாமல் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வழக்கை முடித்து வைத்ததாக கூறி சாந்தி என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், தவறு செய்திருப்பதாக கருதினால் மன்னிப்பு கோருவதாக ஆய்வாளர் தாக்கல் செய்த பதில்மனுவை ஏற்ற நீதிபதி, உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், நிலத்தை விற்றவர் உயிருடன் இருந்தபோதே விசாரித்திருந்தால் முழு உண்மை தெரிய வந்திருக்கும் என்ற நீதிபதி, 10% காவல் அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாக உள்ளதாக குறிப்பிட்டார்.