​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டு மனை தொடர்பான பிரச்சனை - பேத்தியை கட்டையால் தாக்கும் தாத்தா

Published : Feb 10, 2022 5:46 PM



வீட்டு மனை தொடர்பான பிரச்சனை - பேத்தியை கட்டையால் தாக்கும் தாத்தா

Feb 10, 2022 5:46 PM

புதுச்சேரியில் வீட்டு மனை தொடர்பான பிரச்சனையில், பேத்தி உறவுமுறை கொண்ட இளம்பெண்ணை, அவரது தாத்தாவே கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.

பாகூர் பேட் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியும், ஆதிலட்சுமியும் அண்ணன், தங்கை ஆவர். இருவரும் ஒரே வீட்டில் இருந்த போது, இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.

நாளடைவில் திருமணமாகி இருவரும் தனித்தனி வீட்டுக்கு சென்ற நிலையில், அந்த வீட்டு மனையில் ஆதிலட்சுமி பங்கு கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அடிக்கடி இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் வழக்கம்போல் இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறவே, ஆதிலட்சுமியின் பேத்தியை, அவரது தாத்தாவான சுப்பிரமணி நடுரோட்டில் வைத்து கட்டையால் தாக்கிய வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதனையடுத்து, சுப்பிரமணி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.